தமிழ் திரையுலகின் சிற்பிகள்: 1
இயக்குனர் ஸ்ரீதர். இன்றைய தமிழ்த் திரையுலகு இந்த அளவு வளர்ச்சி பெற்றிக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இவர்தான். நாடகத்தனமாக இருந்த தமிழ்த் திரைப் பாடல்களை தனது அழுத்தமான கதைகளின் மூலம் ஒரு புத்தியைக் கொணர்ந்தார். ஸ்ரீதரின் தொடக்கம் நாடகத்தில் இருந்தாலும், அவர் வெகுசீக்கிரமே திரைப்படம் நாடகமல்ல என்று கண்டுகொண்டுவிட்டார்.
அவருடைய திரையுலக ஆரம்ப நாட்களில் அவர் வசனம் எழுதிய திரைப்படங்கள் தேர்ந்த இயக்குநர்களால் கையாளப்பட்டன. இதில் ‘அமர தீபம்,’, ‘உத்தம புத்திரன்’ ஆகிய படங்கள் அடக்கம்.
ஸ்ரீதருக்கு முக்கோணக் காதல் கதைகள் கடைசிவரை அலுத்ததாகத் தெரியவில்லை. ஸ்ரீதர் பாடல்களைச் சூழ்நிலையின் இறுக்கம் அல்லது முரண்பாட்டைக் காட்டப் பயன்படுத்தினார். முக்கோணக் காதல் கதைகளுக்காகவே பாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ என்றுகூடத் தோன்றும்.
ஆனால் ஸ்ரீதரின் மகத்தான படங்கள் என்று கருதப்படுபவை பெரும்பான்மை கறுப்பு வெள்ளைப் படங்கள். இதில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ முதலிடம் வகிக்கும். இரண்டாவது ‘கல்யாண பரிசு’. (எட்டு எழுத்துகளைத் தவிர்க்கத் தலைப்பை இப்படிப் பிழையுடன் ஸ்ரீதர் அமைத்தார் என்பார்கள்.) மூன்றாவது ‘நெஞ்சிருக்கும் வரை’.
இவருடைய படங்கள் தொழில் நுட்பத்திலும் சிறந்ததாக அமைந்திருக்கும். காட்சிகளில் காமிரா கோணங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும், ஒளியமைப்பும் மிகவும் தரத்துடன் இருக்கும். ஸ்ரீதர் தொழில்நுட்பக் கலைஞர்களை நன்கு ஊக்குவித்தார். இவருடைய படங்களில் பாடல்களிலும் நன்கு கவனம் செலுத்துவார், இவரது படங்கள் அனைத்திலும் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றமையே இதற்கு ஒரு உதாரணம்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ 1962இல் வெளியான முதல் வாரம், அது தொடர்ந்து ஓடாது என்றுதான் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதர் படங்களில் அதுதான் மிகப் பெரிய வெற்றியாக விளங்கியது. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் வெற்றி கண்டது. இந்தப் படம் இந்தியிலும் மாபெரும் வெற்றியடைந்தது!
ஸ்ரீதருடைய முப்பதாண்டுத் திரைப்பட வாழ்க்கையில் எல்லாமே வெற்றி என்று கூறிவிட முடியாது. ‘சுமைதாங்கி,’ ‘கலைக்கோயில்,’ ‘சிவந்த மண்’ போன்ற படங்கள் மக்களின் ஆதரவைப் பெறவில்லை. ‘போலீஸ்காரன் மகள்’ படத்தை அவர் மிகுந்த ஆர்வத்தோடு தயாரித்தார். பி.எஸ். ராமையா என்ற ‘மணிக்கொடி’ எழுத்தாளர் எழுதிய அந்த நாடகத்தை சகஸ்ரராமம் நாடகமாகப் போட்டபோது நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் பொதுமக்கள் ஆதரவு என்று பார்க்கும்போது பெரிய வெற்றியல்ல. ஸ்ரீதர் எடுத்த திரைப்படத்துக்கும் நல்ல மதிப்புரைகள் வந்தன. ஆனால் படம் ஓடவில்லை.
ஸ்ரீதர் எதை முயன்றாலும் அதை முழு மனத்தோடும் சிரத்தையோடும் செய்தார். அவருடைய எந்தவொரு திரைப்படத்திலும் தயாரிப்பாளர் - இயக்குநர் கவனம் போதாமை என்றிருக்காது. சுமார் பத்தாண்டுகள் வெளிவந்த சினிமாப் பத்திரிகையான ‘சித்திராலயா’ அவரால் அக்கறையோடு நடத்தப் பட்டது. அவருடைய திரைப்படங்களில் சமூகச் சீர்திருத்தம், முன்னேற்றம் போன்றவை அழுத்தம் பெறாத போதிலும் பொதுவான நட்பும் மரியாதையும் பண்பும் இருக்கும். அவருடைய ஆரம்பப் படங்களில் தீய பாத்திரமே இருக்காது.
ஸ்ரீதருக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறது. படக்காட்சிகளையும் நடிகர்களையும் குறைந்தபட்ச கண்ணியம் தவறாது பார்வையாளர்களுக்கு அளித்தார். கிட்டத்தட்ட ஆடையேயில்லாமல் அசாத்தியமான இடுப்பு, மார்பு அசைவுகளைப் பெண்களே தயக்கமின்றிக் காட்டுவதுபோலவும் எடுத்ததற்கெல்லாம் ஆண்கள் அரிவாளைத் தூக்குவதாகவும் ஸ்ரீதர் காட்டியதில்லை.
ஸ்ரீதர் சமூகத்திலிருந்து விலகியில்லாமல் அதே நேரத்தில் முழக்கமிடுவதிலும் அரசியல் தலைவர்களை முகத்துதி பாடுவதிலும் ஈடுபட்டதில்லை. அவருக்கான துறையாகிய திரைப் படத்தை, அச்சாதனத்தை விளக்கவும் விரிவுபடுத்தவும் ஒரு மாதமிருமுறைப் பத்திரிகையைத் தமிழில் சுமார் பத்தாண்டுகள் நடத்தியிருக்கிறார். முகத்துதியில் ஈடுபடாமல், முன்னோடிகளையும் சக திரைப்படக் கலைஞர்களையும் போற்றியிருக்கிறார்.
ஸ்ரீதர் மகத்தான திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார் எனக் கருத முடியாது. ஆனால் திரைப்படத் துறையிலும் ஒருவர் ஜனரஞ்சகமாக இருந்துகொண்டே கண்ணியத்தையும் கடைபிடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் என்று தயக்கமின்றிக் கூற முடியும்.
(நன்றி - எழுத்தாளர் திரு அசோகமித்திரன்)

No comments:
Post a Comment