சிவரஞ்சனி:
சிவரஞ்சனி பெரிய க
விற்க்கு பதிலாக
சிறிய க
கூடிய
பூப் (bhup) இராகமாகும். இந்த
ஒரு சிறிய
மாற்றம், ராகத்தின்
'mood' ஐ முற்றிலுமாக
மாற்றி விடுகிறது.
இந்த இராகத்தில் பாவம்
பிரதானமாக அமைந்திருக்கும்.
இதை பாடுவதற்கேற்ற நிலைகள்
(moods): சிருங்காரம், பக்தி,
பழைய
நினைவுகள், காயம் பட்ட
காதலர்களின் அழைப்பு.
பாடுவதற்கேற்ற நேரம். இரவின்
இரண்டாம் கால்
பகுதி.
இதனது மாற்ற இராகங்கள்.
ரஞ்சனி
அனுரஞ்சனி
நிரஞ்சனி
"நம்முடைய இனிமையான பாடல்கள்
எல்லாம் சோகமான
எண்ணங்களை வெளிப்
படுத்துபைவையே" - ஷெல்லி
இந்த அடிப்படை விதிகளை
மீறி திரு
எம் எஸ்
விஸ்வநாதன் இந்த இராகத்தை எவ்வாறு கையாண்டிருக்கிறார்
என்று பார்போம்.
முதலில் ராக விதிகளுக்குட்பட்டு
(பக்தி-காதல்-சோகம்) அமைந்த
இரு பாடல்கள்.
ஒளிவிளக்கில் வரும்,
"ஆண்டவனே உன் பாதங்களை"
இறைவனிடம் ஒரு நல்லவரின்
உயிருக்காக போராடும் பாடல். இந்தப் பாடல்
பிறகு தமிழ்
நாட்டில் பட்டி
தொட்டிகளிலெல்லாம் ஒலித்து, தங்களது முதலமைச்சர்
உயிர்பெற வேண்டும்
என்ற வேண்டுதல்
பாடலாகவே அமைந்து
விட்டது. மிகச்
சிறந்த இசைக்
கலவையுடன் அமைந்த
பாடல்.
அடுத்து தங்கையின் மண
வாழ்வு முறிபட்டு
அவள் வீட்டிற்கு
வந்திருக்கும் சூழ்நிலையில்
தம்பியின் வீட்டிற்கு
சென்று அவனிடம்
உதவி கேட்டு
அதற்கு சரியான முறையில்
பதில் வராததால்,
அண்ணன் பாடும்
பாடல். "ராஜபார்ட் ரங்கதுரை என்ற படத்தில்
வரும் அம்மா
தம்பி என்று
நம்பி அவன்
உன்னை வளர்த்தான்
என்ற பாடல்.
சிறிது இராகத்திலிருந்து
வெளியே சென்று
வந்தாலும் இதை
சிவரஞ்சனி லிஸ்டில்
சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் உணர்ச்சி பூர்வமான
பாடல். இதைக்
கேட்டு கண்ணீர்
வரவில்லையென்றால் அவர்கள் அவுரங்கசீப்பாகத்தான்
இருக்க வேண்டும்.
அடுத்தது ஒரு பக்தி
ரசம் ததும்பும்
பாடல். சரவணப்
பொய்கையில் நீராடி என்ற பாடல். அருமையான
பின்னணி இசையுடன்
அமைந்த பாடல்.
அதுவும் சுசீலாவின்
ஹம்மிங் மிக
அருமை.
அடுத்த இரண்டு பாடல்கள்
இவை மூன்றிலும்
இருந்து விலகி
காதலர்களான கணவன் மனைவியின். பாடல்.
முதல் பாடல். பாலும்
பழமும் என்ற
படத்தில் வரும்
நான் பேச
நினைப்பதெல்லாம் என்ற பாடல், காதலித்து மணந்த
கணவன் மனைவியின்
உள்ளத்திலிருக்கும் தீராத அன்பை
வெளிப்படுத்தும் பாடல். அமைதியான இசை வாத்தியங்களின்
பின்னணியில் சுசீலா - டி எம் எஸ்
இருவரின் குரலில்,
எம் எஸ்
வியின் ஹம்மிங்கில்
மனத்தைக் கொள்ளை
கொள்ளும் பாடல்.
அடுத்து இதே முறையில்
குழந்தைகள் பிறந்தவுடன் காதல் கணவன் மனைவி
பாடும் பாடல்
- பார் மகளே
பார் என்ற
படத்தில் வரும்
நீரோடும் வைகையிலே
என்ற பாடல். சிதார்,
வயலின், கிடார்
போன்ற கருவிகளுடன்,
விசிலிசையும் உபயோகித்து கேட்பவர்கள் மனதை வருடும் பாடல்.
அடுத்து மூன்று பாடல்கள்;
துள்ளல் பாடல்கள்,
பூவா தலையா
படத்தில் வரும்
பூவா தலையா,
குழந்தையும் தெய்வமும் படத்தில் வரும், என்ன
வேகம் நில்லு
பாமா, உத்தரவின்றி
உள்ளே வா
படத்தில் வரும்
உத்தரவின்று உள்ளே வா, இதில் பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது
என்ற இடத்தில்
சுத்த கர்நாடக
இசை வடிவம்,
மற்ற இடங்களில்
ராக் அண்ட்
ரோல், ஜாஸ்
இசை வடிவங்கள்.
இவற்றை கேட்ட
பின்பு நீரோடும்
வைகையிலே பாடலைக்
கேட்டால் நம்ப
முடிகிறதா, மெல்லிசை மன்னர்களின் கற்பனை எப்போதுமே
தங்கள் காலத்துக்கு
20 ஆண்டுகள் முன் நோக்கியதாகவே அமைந்திருந்தது.
இந்த ராகத்தில் மேலும்
சில பாடல்கள்,
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
- பக்தி ரசம்
அவளொரு மேனகை
- காதல் சோகம்
சங்கீத ஜாதி முல்லை
- காதல் சோகம்
இதயவீணை தூங்கும்போது - சோகம்
மேலும் நிறைய ஹிந்திப்
பாடல்கள் இந்த
இராகத்தில் அமைந்துள்ளன.
உதாரணத்திற்கு இரண்டு பாடல்கள்
மட்டும் தருகிறேன்
மேரே நைனா சாவன்
பாதோ - காதலர்களின்
அழைப்பு
தேரே மேரே பீச்
மே - காதல்
சோகம்
வாழ்க மெல்லிசை மன்னர்களின்
புகழ்.
(பாடல்கள் உதவி msvtimes.com)

No comments:
Post a Comment