தமிழ்த் திரையுலகின் சிற்பிகள்:
3
எம்ஜியார் என்று அழைக்கப்
படும் திரு
M G ராமச்சந்திரன். இவரது ரசிகர்களால்,
புரட்சித்தலைவர், என்று போற்றப் படுபவர். மக்கள் திலகம்
என்று திரையுலகினரால்
அழைக்கப்
பட்டார். திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு
பொன்மனச்செம்மல் என்ற பட்டம் அளித்தார்.
முதலில் சரித்திர படங்களில்
நடித்து வந்த
எம்ஜியார், பிறகு, தான் பாடிய, தனக்கொரு
கொள்கை, என்ற
பாடலைப் போல்
தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு,
இறுதி வரை
அதையே கடைப்
பிடித்தார். இவரது படங்களில் தாய்ப் பாசம்
மிகவும் முக்கிய
அம்சமாக
விளங்கியது. பாடல்களுக்கு அதிக
முக்கியத்துவம் தந்தார். தனது கொள்கைகள் அனைத்து
தரப்பு மக்களையும்
சென்றடைய வேண்டும்
என்ற எண்ணத்தில்
தனது பாத்திரங்களை
அமைத்துக் கொண்டார்.
குறிப்பாக ஏழை
மக்கள் இதயத்தில்
நீங்காத இடம்
பெற்றவர். அதற்கு
ஒரு சான்று,
ஒரு பொது
நிகழ்சசி முடிந்ததும்
ஒரு மூதாட்டியை
அணைத்து ஆறுதல்
கூறியபோது, "மவராசா, நீ நல்ல இருக்கணும்,
ஆனா அந்த
நம்பியார் கிட்ட
மட்டும் ஜாக்கிரதையா
இருந்துக்கப்பா" என்று வெகுளித்தனமாக
அந்த மூதாட்டி
கூறியது.
நடிகர் திலகமும் இவரும்
தமிழ்த்திரையுலகின் இரு பெரும்
தூண்கள் என்றால்
அது மிகையாகாது.

No comments:
Post a Comment