இன்றைய இராகம் ஆபோகி.
ஆபோகி என்றால்,
ஆடம்பரமான, அற்புதமான, தீவிர முயற்சி என்று
பொருள். அபோகி
என்று இதை
சொல்வது தவறாகும்.
பாடுவதற்கேற்ற நேரம்: இரவின்
இரண்டாவது கால்
பகுதி, ஏறக்
குறைய நள்ளிரவு
நேரம்.
பாடுவதற்கேற்ற நிலைகள்:
விரகம், சிருங்காரம்,
பக்தி ஆகிய
மன நிலைகள்.
இந்த இராகத்தில் மெல்லிசை
மன்னர்கள் இணைந்தும்,
எம் எஸ்
வி அவர்கள்
தனியாகவும் வடித்த பாடல்களில் மூன்றைப் பற்றி
இன்று காண்போம்.
முதல் பாடல் மாலையிட்ட
மங்கை என்ற
படத்தில் வரும்,
நானன்றி யார்
வருவார் என்ற
பாடல். எனக்குத்
தெரிந்து மத்திய
ஸ்தாயில் டி
ஆர் மகாலிங்கம்
துவங்கும் ஒரு
பாடல் இது.
உடன் பாடியவர்
A P கோமளா அவர்கள்,
காதலர்களின் சிறு கேலியையும் அதனால் ஏற்படும்
ஊடலையும் பின்
கூடலையும் விளக்கும்
பாடல் இது.
இடையே வரும் சிறு சிறு புல்லாங்குழல், மற்றும்
வீணையின் ஒலிகள்
மனதுக்கு மிகவும்
ரம்மியமானவை. பாடலின் முடிவில் இருவரும் ஒன்றாக
இணைவது தமிழ்
சினிமாவிற்க்கே உரித்தான ஒரு குணம் ஆகும்.
இரவில் கேட்டால்
கண்டிப்பாக இளம் காதலர்களிடையே ஒரு இன்ப நிலையை
ஏற்படுத்தக் கூடிய பாடல் இது. தங்களது
ஆரம்பக் காலத்திலேயே
மெல்லிசை மன்னர்கள்
இந்த அளவு
தரமானதொரு இசையை
வழங்கியிருப்பது பாராட்டக் கூடிய அம்சமாகும்.
பாடல் இரண்டு: " தங்க
ரதம் வந்தது
வீதியிலே" என்ற பாடல், கலைக்கோயில் என்ற
படத்திலிருந்து. இதன் சிறப்பம்சம், பாலமுரளிக்ருஷ்ணா அவர்களையும், வீணை சிட்டிபாபு அவர்களையும்
முதன்முதலாக தமிழ்த் திரைசியுலகிற்கு எம் எஸ்
வி அறிமுகப்
படுத்தியது. திரு பாலமுரளிக்ருஷ்ணாவின் ஆரம்ப "ஹம்மிங்கே"
அவரது வரவுக்கு
கட்டியம் கூறி
விடுகிறது, பின் அவர் தங்கரதம் வந்தது
வீதியிலே
என்று நிறுத்தி துவங்கும்போது, நாம் காதில்
பாரதி கூறியது
போல் தேன்
வந்து பாய்கிறது. அகார ஆலபனைகளின்போது அவரது
குரல் வெகு
அனாயாசமாக சஞ்சாரம்
செய்து பாடலுக்கு
ஒரு முழுமையான்
கர்நாடக இசை
அந்தஸ்தை அளிக்கிறது.
உடன் பாடும்
திருமதி சுசீலாவின்
குரலும் தேனை
ஒத்த குரல்.
திரு சிட்டி
பாபு அவர்களின்
வீணை இசையோ,
வர்ணிக்க இயலாது.
அவ்வளவு இனிமை.
மொத்தத்தில் இந்தப் பாடல் ஒரு அமுத
கானம் என்றால்
மிகையாகது. அந்த அளவு உயர்ந்த தரத்தில்
இசையமைத்திருப்பார் மெல்லிசை மன்னர்
இந்தப் பாடலுக்கு.
பாடல் மூன்று. "வணக்கம்,
பலமுறை சொன்னேன்,
சபையினர் முன்னே" என்ற பாடல். அவன்
ஒரு சரித்திரம்
படத்திலிருந்து. துவக்கத்தில் வெஸ்டர்ன் ஜாஸ் இசை
வடிவத்தில் ஆரம்பித்து, பின்னர் சுசீலாவின் இனிமையான
ஹம்மிங்குடன் துவங்குகிறது பாடல். அவர் பாடத்
துவங்கியவுடன், நடிகர் திலகத்தின் முகத்தில் தோன்றும்
பலவித உணர்ச்சிக்
கலவைகளின் வெளிப்பாட்டைப்
பாராட்டியே ஆக வேண்டும், வெளிநாடு சென்று
திரும்பியவர் அந்த நாட்டு நாகரீகத்தின்படி தோற்றமளிப்பார் என்று பலரும் நினைக்கையில்,
அவர் நமது
தமிழ்ப் பண்பாட்டின்படி
புடவையுடன் தோன்றி தமிழில் பாடும்போது தனது
ஒரு புருவத்தை
உயர்த்தி தனது
வியப்பை வெளிக்
காட்டுவார். இந்தப் பாடலில் குழலும், வயலினும்,
சிதாருடன் இணைந்து
அழகாக கையாளப்
பட்டிருக்கும். சரணத்தின்
முடிவில் வரும்
குழலிசை மனதை
மயிலிறகால் வருடும்,
இராகங்களை கையாளும் விதத்தில்
மெல்லிசை மன்னர்களின்
நேர்த்தியைக் கண்டீர்கள். பிறிதொரு நாளில் மற்றொரு
இராகத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி! வணக்கம்.

No comments:
Post a Comment