Saturday, 20 December 2014

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள்: 1 - S V வெங்கட்ராமன்

சிறுவயதில் தந்தையை இழந்த இவர், முதலில் நாடங்களில்  நடித்தும், பாடியும், ஹார்மோனியம் வாசித்தும் வந்தார். பிறகு திரைப் படங்களில் நடிக்கத் துவங்கினார். ஒரு படப்பிடிப்பின் சண்டைக் காட்சியின்போது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஓய்விலிருந்த இவரை பெங்களூர் கப்பன் பார்க்கில் பார்த்த திரு A V மெய்யப்ப செட்டியார், சென்னை அழைத்து வந்து தனது நந்தகுமார் என்ற படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

இவர் இசை அமைத்த திரைப்படங்கள் சில:
நந்தகுமார், சகுந்தலை, கண்ணகி, ஹரிச்சந்திரா, மீரா (தமிழ், ஹிந்தி) ஸ்ரீ முருகன், ஸ்ரீ கிருஷ்ண விஜயம், ஞான சௌந்தரி, வனசுந்தரி, பணக்காரி, மனோகரா (தமிழ், தெலுங்கு, ஹிந்தி) மாமன் மகள், பானை பிடித்தவள் பாக்யசாலி, இரும்புத்திரை, மருத நாட்டு வீரன், அக்பர் (தமிழ்) அறிவாளி போன்றவை.

இவர் இசையில் பாடிய பாடக நடிகர்கள்:
M M தண்டபாணி தேசிகர், G N பாலசுப்ரமணியம், M S சுப்புலக்ஷ்மி, D K பட்டம்மாள், P U சின்னப்பா, U R ஜீவரத்தினம்,  N C வசந்தகோகிலம், T R மகாலிங்கம், T R ராஜகுமாரி, சித்தூர் V  நாகையா, N S கிருஷ்ணன், T A மதுரம், T S துரைராஜ், J P  சந்திரபாபு போன்றோர்.

இவர் இசையில் பாடிய பின்னணி பாடகர்கள்:
T M சௌந்தரராஜன், A M ராஜா, சீர்காழி கோவிந்தரராஜன், திருச்சி லோகநாதன், V N சுந்தரம், T A மோதி, M L வசந்த குமாரி, P லீலா, ஜிக்கி, T V ரத்தினம், A P கோமள, ராதா ஜெயலக்ஷ்மி, ஜமுனா ராணி, P சுசீலா, K ராணி, L R ஈஸ்வரி போன்றோர்.

வெங்கட்ராமன், M S சுப்புலக்ஷ்மியின் புகழ்பெற்ற பஜகோவிந்தத்திற்கு இசையமைத்தவர். மேலும் அவர் பாடிய தனிப் பாடல்களான, வடவரையை மத்தாக்கி, முடி ஒன்று  மூவுலகங்களையும் போன்ற பாடல்களுக்கும், மகாகவி  பாரதியாரின் பாடல்கள் சிலவற்றுக்கும் இசையமைத்துள்ளார். குருவாயூர் ராமச்சந்திரன் பாடிய நாராயணீ யத்திற்கு இசையமத்தவரும் இவர்தான். மகாத்மா காந்தியின் புதல்வர் தயாரித்த VOICE OF INDIA, ஆவணப் படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார்.
(

No comments:

Post a Comment