பால்குடி டேஸ் 13 - தருமபுரி நினைவுகள்.
"விளக்கெண்ணையும் வேதியியலும்"
(சிறுவயதில் வயிறு சரியாக இருப்பதற்கும், குடலிலுள்ள புழுக்களை நீக்குவதற்கும் பேதிக்கு கொடுப்பார்கள். அதை சில இடங்களில் வேதிக்கு என்று சொல்வார்கள். ஆகவே இந்த தலைப்பு)
ஜனவரில பொங்கல் முடிஞ்ச அடுத்த ஞாயிறும், ஜூலை மாசம் கடைசி ஞாயிறு வரும்போதும், சனிக்கிழமை நைட்டே வயித்தைக் கலக்க ஆரம்பிக்கும்.. ஏன்னா அடுத்த நாள் காலைல வெறும் வயித்துல விளக்கெண்ணெய் தருவாங்க, அதான். குறிப்பா ஏன் இந்த ரெண்டு மாசம்னு கேக்கறீங்களா? தீபாவளி பொங்கல்னு சும்மா இஷ்டத்துக்கு பலகாரம் தின்னுருப்போம். அதெல்லாம் சரி செய்ய வேண்டாமா? அதே மாதிரி ஆகஸ்ட் பொறந்தாலே வரிசையா கிருஷ்ண ஜெயந்தி, பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரின்னு சில பல பண்டிகைகைகள். தமிழனைப் பத்திதான் தெரியுமே! எண் ஜாண் உடம்புக்கு அவனுக்கு வயிறே பிரதானம்.
காலைல எழுந்து பல் விளக்கினவுடனே என்னோட அண்ணன் என்னை அம்மா கூப்பிடறாங்கன்னு சொல்லிட்டு நைசா திண்ணைக்கு போயிடுவான். எஸ்கேப்பாம். நமக்குத் தெரியும், இதுலேர்ந்து தப்பிக்க முடியாதுன்னு. பலியாடு மாதிரி தலையாட்டிக்கிட்டே சமையல் ரூமுக்கு போவேன். எதிர்த்து ஒண்ணும் பிரயோஜனம் இல்லேன்னு தெரியும். அதுனால சமரசமா, "எனக்கு கிண்டில ஊத்திக் கொடுத்துடுங்க, நான் ஒரே மடக்குல குடிச்சுடறேன்"னு சொல்லி வாங்கி ஒரே உறிஞ்சுதான். வெளில வரும்போது மூஞ்சியை ஒண்ணும் நடக்காத மாதிரி வெச்சுக்கிட்டு வாசல் திண்ணைல இருக்கற அண்ணன்கிட்ட போய் "நமக்கு அடுத்த வாரம்தானாம், அக்காக்கு மட்டும்தான் இன்னிக்கு, உன்னை காப்பி குடிக்க கூப்பிட்டாங்க"ன்னு சொல்லி உள்ளே அனுப்புவேன், ஏன்னா அக்காக்கு குடுத்தது அவனுக்கு தெரியும். அவன் ஒரு சந்தேகத்தோடயே உள்ளே போவான்.காப்பி அரை கப் இருக்கறத பாத்தவொடனேயே அவனுக்குத் தெரிஞ்சுடும் இது வெளக்கெண்ணைதான்னு, ஓடப் பாப்பான். வாசல்ல எங்க பாட்டி வழியை மறிச்சி நின்னுக்குவாங்க. வேற வழியில்லாம டம்ப்ளரை கைல வாங்கி அரை டம்ப்ளர் குடிக்கறதுக்குள்ள ஆயிரம் அலப்பறை செய்வான். வாந்திவர்றா மாதிரி ஆக்ட் எல்லாம் குடுப்பான். எங்க பாட்டி கிட்டயா நடக்கும்? ரொம்ப அலட்டினா முதுகுல சுரீர்னு விழும்னு தெரியும். அதுனால ஒரு வழியா குடிச்சிட்டு, வெளில வந்து என்னைத் தேடுவான், எதுக்கு, நொங்குன்னு ஒரு கொட்டு வைக்கத்தான். அவனுக்கு எலும்பு தேகம். கொட்டினான்னா கபாலமே பொளந்துக்கறா மாதிரி கொட்டுவான். நான் நைசா பக்கத்து வீட்டு திண்ணைல போய் ஒளிஞ்சுக்குவேன். 10 நிமிஷத்துல வீட்டுக்கு வந்துதான் ஆகணும். ஒரே ஓட்டம்தான் பாத்ரூமுக்கு. போயிட்டு வந்தா அவன் எரிச்சலோடு காத்துகிட்டிருப்பான். அப்ப அடிக்க முடியாது. ஒரே ஓட்டம்தான் உள்ளே.
இப்படி கௌண்டமணி கணக்கா 9 மணி வரை போயிவந்து கை காலெல்லாம் வெலவெலத்துப் போயிடும். சாப்பிட எதுவும் தர மாட்டாங்க, இன்னொரு காப்பிதான். அது தேவாம்ருதமா இருக்கும் அப்ப. ஒரு வழியா ஒரு 11 மணிக்கு எல்லாம் செட்டில் ஆயிடுச்சின்னு உறுதிப்படுத்திக்கிட்டு எங்கப்பா ஒரு பெரிய செம்பு அண்டால தண்ணி எடுத்து வெயில்ல வெப்பார். அது வெய்யில்லேயே சூடேறணும். அதுல தண்ணி கலக்காம குளிப்பாட்டுவாங்க. அப்பத்தான் ஜலதோஷம் புடிக்காதாம். எப்படா 1 மணி ஆகும்னு காத்திட்டிருப்போம். அப்பவும் குளிச்சப்பறமும் ஏதாவது போனோமான்னு செக் செஞ்சிட்டுதான் சாப்பாடு போடுவாங்க. அருமையான சீரக ரசம். பருப்பு துவையல் காரம் இல்லாம. மத்த சமயத்துல செய்யற பருப்புத்துவையல் எல்லாம் எந்த மூலைக்கு. பத்தியமா போடற இந்த துவையலை ஒரு வெட்டு வெட்டுவோம்.
சாயங்காலம் ரொம்ப பசின்னா ரெண்டு இட்லி, இல்ல ஒரு தோசை, அதே பருப்பு துவையல் தொட்டுக்கிட்டு. அப்பறம் டீ இல்லாட்டா காப்பி. (வழக்கமா எங்களுக்கு காப்பி டீ கிடையாது, கஞ்சி இல்லேன்னா ஓவல்டின் தான்) அன்னிக்கு விளையாட வெளில அனுப்ப மாட்டாங்க. வீட்டுலயே தாயக்கட்டை, கேரம் போர்ட் இது மாதிரிதான். எங்க அப்பா வெளில போயிட்டு வரப்ப, பாவம் பசங்கன்னு ஜாங்கிரி, இல்லேன்னா குளோப் ஜான் (அப்படிதான் அப்பெல்லாம் சொல்லுவோம்) வாங்கிட்டு வருவாரு. ஆஹா, தீபாவளி அன்னிக்கு தின்னற இனிப்பு கூட அவ்வளவு பிரமாதமா இருக்காது.
நைட் மோர்சாதம் போடுவாங்க, அதே பருப்பு துவையலோட. எங்க வீட்டுல தினமும் தயிர் கடைஞ்சு வெண்ணெய் எடுப்பாங்க, அந்த மோர் தனி சுவைதான். சீக்கிரம் புளிக்காது. நல்லா வயிறு நிறைய சாப்பிடுவோம். எங்களுக்காக அன்னிக்கு பெரியவர்களும் பத்தியமாதான் சாப்பிடுவாங்க. அப்ப தெரியல. இப்ப நெனைச்சா சின்ன சின்னதாவும் பெருசாவும் எவ்வளோ தியாகமெல்லாம் செஞ்சிருக்காங்கன்னு ஒரு ஃபீலிங் வர்றதை அடக்க முடியல.
இந்த வெளக்கெண்ணெய் மேட்டர் என் ஸ்கூல் ஃபிரெண்ட்ஸ்க்கு தெரியாம பாத்துக்கணும். இல்லேன்னா மறுநாள் ஸ்கூல்ல மானத்த வாங்கிடுவாங்க.
நான் 6 ஆம் கிளாஸ் படிக்கற வரை இதே கதைதான். நான் 7 ஆவது போனவொடனே எங்க அண்ணன் மெட்ராஸ் வந்துட்டான் படிக்கறதுக்கு. அக்காவும் பெரியவங்களாயிட்டாங்க. அதுனால நிறுத்தியாச்சு. இப்பெல்லாம் டாக்டர்ங்க குழந்தைங்களுக்கு இதெல்லாம் தரக்கூடாதுன்னு சொல்றதை கேட்டு இதெல்லாம் செய்யறதில்ல. அதுனாலதான் பலவித வியாதிகள்.
ஓகே மீண்டும் சந்திப்போம்.

No comments:
Post a Comment