தமிழ்த் திரையின் சிற்பிகள் 9:
டி எஸ் பாலைய்யா. நடிப்புக்கு ஒரு "பலே அய்யா".வில்லன் பாத்திரமா, நகைச்சுவையா, அல்லது உணர்ச்சிபூர்வமான குணச்சித்திர வேடமா? பாலைய்யாவை போட்டுக் கொள்வோம் என்று சொல்லுமளவுக்கு மிகவும் அனாயாசமாகவும் தனித்துவம் நிறைந்தும் செய்யக் கூடியவர். தனது குரலை சற்றே ஏற்றி இறக்கி, சிறு அதிர்வுகளைத் தந்து தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர்.
குரூர நோக்குடன் முகத்தில் புன்னகையை மலர விட்டவாறே பாட்டு வாத்தியாராக நடித்த மணமகள், தில்லானா மோகனாம்பாளில் "என்ன இன்னிக்கு ஆட்டம் ஜாஸ்தியாய் இருக்கே" என்று ரயிலின் ஆட்டத்தை சொல்வது போல் மோகனாவின் தாயாரை அடிக்கும் கிண்டல், "எனக்கு அங்கே ஒரு சோடாக் கடைக்கரனைத் தெரியும்" என்று பிடிவாதமாக சிவாஜியிடம் நானும் வருவேன் என்று பிடிக்கும் அடம், நகை விற்கும் சேட்டாக தூக்கு தூக்கியில் "அரே பியாரி, நிம்மல் மேலே நம்கீ மஜா", பாகப் பிரிவினையில் குடும்பத்தை இரண்டாக எம் ஆர் ராதா பிரிப்பதை தடுக்க இயலாமல் வருந்தி கண்ணீர் சிந்துவது, போன்றவை பாலையாவின் சில மிக சிறந்த பாத்திரங்கள். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல், திருவிளையாடல் படத்தில் அகந்தை நிரம்பிய ஹேமநாத பாகவதராக நடித்து பாண்டிய நாட்டவரை சவாலுக்கு அழைப்பது அமைந்தது. இதில் ஒரு நாள் போதுமா என்ற திரு பாலமுரளியின் பாடலுக்கு மிகவும் தத்ரூபமாக ஒரு கைதேர்ந்த இசை வல்லுனரைப் போல நடித்தது இவரது தனிச் சிறப்பு.
சிறுவயதில் திருநெல்வேலியில் முகாமிட்டிருந்த சர்க்கஸ் கம்பெனியால் கவரப்பட்டு சர்க்கஸில் சேரும் ஆசையில் வீட்டை விட்டு ஓடி மானாமதுரை சென்றார். அங்கே கையிலிருக்கும் பணம் யாவும் செலவானதும் சிறு ஹோட்டலிலும், ஒரு இறைச்சிக் கடையிலும் வேலை பார்த்து, பின் திருநெல்வேலிக்கே திரும்பி வந்தார். அப்போது ஜெகன்னாத அய்யர் என்பவரின் நாடகக் குழு அங்கு முகாமிட்டிருந்தது. அதில் பாலையா சேர்ந்தார், சில நாட்களிலேயே அந்த கம்பெனி மூடப்பட்டது. நாகலிங்க செட்டியார் என்பவர் பாலா மோகன சங்கீத சபா என்றொரு நாடகக் குழுவை ஆரம்பித்து அதில் ஜெகன்னாத அய்யர் குழுவிலிருந்த சிலரை சேர்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு குறைவான வேடங்களே கிடைத்தன. ஒரு முறை அவர்கள் ஷேக்ஸ்பியரின் CYMBELINE என்ற நாடகத்தை மேடையேற்றியபோது, அதில் பெசானியோ (PESANIO) வேடத்தில் நடித்த நடிகர், பாலையாவிடம் அந்த வேடத்தில் நடித்து குறைந்தது மூன்று முறையாவது கைத்தட்டல் வாங்க முடியுமா என்று சவால் விட்டதை ஏற்ற்றுக் கொண்டு அவ்வேடத்தில் நடித்தார். அவர் மேடையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவருக்கு கைத்தட்டல்கள் கிடைத்தன. இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
அந்தக் கம்பெனியும் மூடப்பட்ட பின் பாலையா திரு எம் கே கந்தசாமி முதலியாரது (நடிகர் எம் கே ராதாவின் தந்தை) ராஜாம்பாள் நாடகக் குழுவில் இணைந்தார். கந்தசாமி முதலியார் எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கத்தில் தனது கதை வசனத்தில், தனது மகன் எம் கே ராதா கதாநாயகனாக நடிக்கும் சதிலீலாவதி படத்தில் இவருக்கு வாய்ப்பளித்தார். இந்தப் படத்தில் மக்கள் திலகம் எம் ஜி ஆரும் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத் தக்கது.
இவரது நடிப்பால் கவரப்பட்ட எல்லிஸ் ஆர் டங்கன், தனது அனைத்துப் படங்களிலும் அவருக்கு வாய்ப்பளித்தார். அம்பிகாபதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இவர் ஒரு சிறந்த வில்லனாக உருவெடுத்தார்.
நாடகத்தின் மீது உள்ள தீராக் காதலினால் சொந்தமாக ஸ்ரீ சாயி பால கான சங்கீத சபா என்ற குழுவை தொடங்கி அதில் பெருத்த நஷ்டம் அடைந்தார். பிறகு அந்தக் குழுவை மூடி விட்டார்.
இவருக்கு மறுபடியும் திரைப் பட வாய்ப்புகள் வந்தபோது இவர் ஒரு துறவி போன்று வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். வேலைக்காரி, ஒரு இரவு போன்ற படங்களில் இவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் மிகவும் பாராட்டப் பெற்றன. பின்னாளில் இயக்குனர் பீம்சிங் இவருக்கு தனது "பா" வரிசைப் படங்களில் வாய்ப்பளித்தார். இயக்குனர் ஸ்ரீதர், இவருள்ளே இருக்கும் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு ஆகிய படங்களில் வேடங்கள் தந்தார். இதில் காதலிக்க நேரமில்லையில் இவரும் நாகேஷும் தோன்றும் கதை சொல்லும் காட்சியில் இவரது முகபாவங்களும் வசனங்களும் இவருக்கே உரித்தானவை. பாலச்சந்தர் அவர்களின் பாமா விஜயத்தில் ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவனாக வந்து இவர் பாடிய "வரவு எட்டணா, செலவு பத்தணா" பாடல் மிகவும் பிரபலம், வேறு எந்த குணச்சித்திர நடிகருக்காவது இவருக்கு அமைந்தாற்போல் பாடல்கள் அமைந்திருக்குமா என்பது சந்தேகமே.
எம் ஆர் ராதா இயக்கத்தில் "சுட்டான், சுட்டேன்" என்ற படத்தில் நடிக்க இருந்த சமயத்தில் நோய்வாய்பட்டு தனது 58ஆவது வயதில் காலமானார்.
இவருக்கு திரை உலகமோ, அல்லது தமிழக அரசாங்கமோ தகுந்த கௌரவத்தை அளிக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.
(COURTESY: MR MOHAN RAM'S 100 YEARS OF LAUGHTER)